9 வயது சிறுமியுடன் பூனைக்குட்டி போல் உலாவரும் புலிக்குட்டி..வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 15, 2018 08:12 PM
இளங்கன்று பயமறியாது என்பதற்கு உதாரணமாக, சீனாவில் 9 வயது சிறுமி, ஒருவர் புலிக்குட்டியுடன் வீதி உலா செய்யும் வீடியோ பரவலாகி வருகிறது.
நாங்கலாம் சுனாமியில ஸ்மிங் போட்டவங்க.. நாங்கல்லாம் நாடா புயலில் நடனமாடியவங்க..நாங்கல்லாம் சென்னை வெள்ளத்துல செனா சாப்பிட்டவங்க என்றெல்லாம் வீம்புக்கு பேசி பில்டப் கொடுப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் ஆபத்து என்று வந்தால், வெறும் அட்டைக் கத்திகளாகிவிடுவார்கள்.
ஆனால் சீனாவின் ஃபியூஜன் புரொவின்ஸில் காலணி விற்பனையகத்தில் பணிபுரிபவரின் 9 வயது மகளான சன் ஸியோஜிங் மூன்று மாத பெண் புலி குட்டியை வளர்த்து வருகிறாள். அந்த குட்டி பெண் புலிக்கு சீன மொழியில் ஹீனியூ என்கிற பெயரை (பெண் புலி) சூட்டி தன்னுடனே எங்கு சென்றாலும் அழைத்துச் செல்லுகிறாள்.
அதுமட்டுமல்லாமல், சிறுமி சன் பள்ளியில் இருந்து வந்தால் போதும் புலிக்குட்டி ஒரு நாய்க்குட்டியை போல் சிறுமியுடன் விளையாடுவதாகவும், மற்றவர்களை பொறுத்தவரை அவர்கள் சிறுமியும, புலிக்குட்டியும்; ஆனால் அவர்கள் இருவரைப் பொறுத்தவரை அவர்கள் தோழிகள் என்று சிறுமியின் தந்தை நெஞ்சம் நெகிழ சீனாவின் மாலை நேர பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார்.