’நில்லுங்கடா டேய்’...திருடர்களை விரட்டிப் பிடிக்கும் 8 வயது சிறுமி.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 03, 2018 04:02 PM
8 year old girl confronted armed robbers viral video

பிலிப்பைன்ஸில் தந்தையை துப்பாக்கி காட்டி மிரட்டிய கொள்ளைக் காரர்களை 8 வயது சிறுமி துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிலிபைன்ஸின் கேவிட் நகரில் கடந்த வாரம், ஒரு சிறுமி தன் வீட்டு முன் விளையாண்டுகொண்டிருக்கும்போது, ஹெல்மெட் அணிந்தபடி வந்த மூவர், சிறுமியைத் தாண்டி சென்று எதிர்பாராத விதமாக அவளுடைய தந்தையிடம் துப்பாக்கி முனையில் பணப்பை ஒன்றை கொள்ளை அடிக்க முயன்றனர்.

 

அப்போது சிறுமியின் தந்தை தகராறு செய்ய, பயத்தில் திருடர்கள் பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடத் தொடங்கினர். அதில் ஒருவர் சிறுமியை மோதிவிட்டுச் செல்லவும், சிறுமி அந்த திருடன் விழுந்தவுடன், அவன் கையில் இருந்த பணப்பையை இழுக்க முயல்கிறாள். மீண்டும் சிறுமியைத் தள்ளிவிட்டு, ஓடத் தொடங்குகிறான்.

 

தன் தந்தையிடம் இருந்து பணத்தை திருடிச்சென்ற அந்த கோழைகளை பார்த்ததும் கோபம் வந்ததாகவும், தனக்கு அந்த திருடர்களை பார்த்து தான் பயம் வரவில்லை என்று இதுபற்றி கூறிய சிறுமி மீண்டும் தன்னைப் பார்த்தால் நிச்சயம் அவர்கள் வருந்துவார்கள் என்றும் கூறியிருக்கிறாள்.

 

Tags : #VIRAL #VIDEO #CAVIT #CRIME