அடிக்கடி 'காபி' குடித்தால் ஆயுள் அதிகமாம்.. ஆய்வில் தகவல்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 04, 2018 11:55 AM

தினசரி வாழ்வில் காபி அருந்துவது உடலுக்கு நல்லது என்றும், அளவுக்கு மீறி குடித்தால் நல்லதில்லை என்றும் பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன.
இந்தநிலையில் ஒருவர் தினமும் 8 கப் காபி குடித்தால் அவர் நீண்டநாட்கள் உயிர் வாழலாம் என புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து அமெரிக்கா நிபுணர்கள் சுமார் 10 ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள 5 லட்சம் பேரை வைத்து இந்த ஆய்வை நடத்தினர்.
இந்த ஆராய்ச்சியில் அதிக அளவு(தினசரி 8 கப்) காபி குடித்தவர்கள் உயிரிழப்பில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும்,காபியில் உள்ள ‘காபின்’ என்றமூலப்பொருள் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அதில் உள்ள ‘ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்’ எனப்படும் உயிர் வெளியேற்ற எதிர்ப்பிகள் ‘செல்’கள் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகின்றன.அதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் என, அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.



OTHER NEWS SHOTS
