30 அடி ஆழம்.. நீண்ட போராட்டத்துக்கு பின் 7 வயது சிறுத்தைப்புலி மீட்பு!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 08, 2018 04:51 PM

7 வயது சிறுத்தைப் புலி ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து, அதனை வனத்துறையினர் போராடி மீட்ட சம்பவம் வீடியோவாக பரவி வருகிறது. மஹாராஷ்டிராவின் ஓட்டுர் எனும் இடத்தில் உள்ளது யடவாடி கிராமம்.
இங்குள்ள கிணறு ஒன்றில் 7 வயது சிறுத்தைப்புலி ஒன்று, தவறி விழுந்தது அனைவரையும் கதிகலங்க வைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த சிறுத்தைப்புலியை மாட்டின் கயிறை கட்டி தூக்குவதுபோல, சிறுத்தையின் கூண்டில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி மீட்டனர்.
Tags : #RESCUE #LEOPARD #INDIA
