மாறு வேஷத்தில் சபரிமலை கோவிலுக்குள் சென்று வழிபட்ட பெண்.. பரபரப்பான கேரளா!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 10, 2019 11:34 AM

கேரளா: சபரிமலை ஐயப்பன் சந்நிதானத்துக்குள் மாறுவேடம் அணிந்து சென்று வழிபட்டு வந்த பெண்மணி பலராலும் பேசப்பட்டு வருகிறார். எனினும் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களையும் கடையடைப்பையும் செய்து வருகின்றனர்.

36-year-old woman dyed her hair grey to enter in Sabarimala temple


சபரிமலை சந்நிதானத்துக்குள் அனைத்து வயது பெண்களும் பாரபட்சம் இன்றி செல்லலாம், அவர்கள் செல்வதற்கான தடைகள் என்று எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம்  கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, இதுவரை 11 பெண்களுக்கு மேல் முற்பட்டு சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

இதனை அடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு முந்தைய புதன் கிழமை அன்று கேரளாவைச் சேர்ந்த 3 பெண்கள் விடியற்காலை நேரத்தில் சென்று ஐயப்பனை 18-ஆம் படிகளில் ஏறாமல் நின்றபடி தரிசனம் செய்ததாகவும் அதற்கு பக்தர்களும் காவல்துறையும் உதவி புரிந்ததாகவும் கூறினர்.

இந்நிலையில் கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மஞ்சு  என்கிற 36 வயது மதிக்கத்தக்க பெண்மணி, வயதான பெண்மணி போன்ற தோற்றத்தில் வேடமிட்டு, நேற்று முன்தினம் (ஜனவரி 08) ஐயப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட்டு வந்துள்ளார்.