இணையத்தில் வைரலாகும் 36 விநாடி ‘ப்ளாங்க்’ சேலஞ்ச்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 20, 2018 11:42 AM
36 Sec Plank Challenge goes Viral On Social Medias heart disorders

பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய இன்சூரன்ஸ் திட்டமானது 36 ஆண்டுகள் பாதுகாப்பை உறுதி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 36 விநாடிகள் உடலை நெடுஞ்சாண்கிடையாகவும், தரைமட்டத்துக்கு இணையாகவும் மணிக்கட்டு மற்றும் பாத நுனிகளால் நிறுத்தி வைக்கப்படும் ’ப்ளாங்க் சேலஞ்ச்; ஒன்றை இணையவாசிகள் செய்து வருகின்றனர். 

 

இவ்வாறு செய்து #36SecPlankChallenge என்கிற ஹேஷ்டேகில் அதன் புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்து பகிரும் ஒவ்வொருவரின் பேரிலும், ஹ்ருதயா  ஆரோக்கிய அறக்கட்டளை மையத்தின் சார்பில் இதயம் சம்மந்தமான மருத்துவத்தை ஏழ்மையான குழந்தைகளுக்குச் செய்வதற்கான மருத்துவ உதவித்தொகையினை இன்சூரன்ஸ் நிறுவனம் செய்கிறது. எனவே பலரும் இந்த சேலஞ்சை முயற்சித்து வருகின்றனர். பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் உடபட பல பிரபலங்களும் இந்த சேலஞ்சை செய்து வருகின்றனர்.  

 

Tags : #HOLDTHATPLANK #BAGIC4FITNESS #36SECPLANKCHALLENGE