ஒரு வருடமாக இளைஞரின் தொண்டையிலேயே இருந்த 20 செ.மீ ஸ்பூன்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 02, 2018 07:09 PM
மனித உடல் எதையும் உட்கொண்டு செரிக்கும் குப்பைக் கிடங்கு அல்ல என்பது பலருக்கு புரிவதில்லை. சீனாவில் ஸாங் என்கிற ஒரு வாலிபர் தன் நண்பர்களுடன் விளையாட்டாக பெட் கட்டி, ஒரு 20 செ.மீ நீளமுள்ள ஸ்பூன் ஒன்றை விழுங்கியுள்ளார். ஆனால் அந்த ஸ்பூனை விழுங்கியதால் அவருக்கு உடல் ரீதியாக எந்தவொரு உபாதையுமே ஏற்படவில்லை. நண்பர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். இந்த இளைஞரோ அதைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனினும் கடந்த சில நாட்களாக தொண்டையில் ஏதோ உபாதையை உணர்ந்தவர், இறுதியில் ஒருநாள் மூச்சுக் குழல் அடைத்துக்கொண்டதை உணர்ந்துள்ளார். பின்னர் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். இதனையடுத்து சீனாவின் ஸின்ஜியாங் கோல் மைன் மருத்துவமனையில் நிகழ்ந்த உடற்பரிசோதனையின் போது அவரது மூச்சுக்குழலுக்கு நேராக சென்று அடைத்துள்ள அந்த 20 செ.மீ பிளாஸ்டிக் ஸ்பூனை எக்ஸ்-ரே காட்டியுள்ளது.
தன் வாழ்க்கையில் இப்படி ஒரு கேஸை பார்த்ததில்லை என்று சொன்ன மருத்துவர்கள் ஒருவழியாக சிரமப்பட்டு அறுவை சிகிச்சை செய்து ஸ்பூனை வெளியே எடுத்துள்ளதோடு மற்றவர்களுக்கும் இதுப்போன்று விபரீதத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஸாங் சில நாட்கள் சரியாக பேச சிரமப்பட்டுதான் குணமாவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.