காஞ்சிபுரம் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில், இதுவரை 1590 ஆதரவற்ற முதியவர்கள் சடலமாக புதைக்கப்பட்டுள்ளது என கருணை இல்ல பொறுப்பாளரான பாதிரியார் தாமஸ் தெரிவித்துள்ளதாக, பாலிமர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை உட்பட 6 துறைகள் கருணை இல்லத்தில் நடத்திய ஆய்வில், ஆதரவற்ற முதியவர்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், சரியாக உணவு வழங்காமல் மனநிலை பாதிக்கும் நிலைக்கு தள்ளி கருணை கொலை செய்வதாகவும் அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த முறையில் 1590 பேர் புதைக்கப்பட்டுள்ளதாகவும், புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புகளை சேகரிக்க 25 அடி ஆழத்தில் குழி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
1590 சடலங்கள் புதைக்கப்பட்டதை ஒத்துக்கொண்ட தாமஸ், கருணை இல்லத்தில் சட்ட விரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
BY SATHEESH | FEB 23, 2018 10:27 AM #KANCHIPURAM #DEAD BODY #BURIED DOWN #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS