96 India All Banner
Ratsasan All Banner

ஒரே வீட்டிலிருந்து பிடிபட்ட 14 ராஜநாக குட்டிகள்...அச்சத்தில் விவசாயி குடும்பம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 06, 2018 02:18 PM
14 poisonous snakes recovered From UP village

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு விவசாயி வீட்டிலிருந்து 14 குட்டி ராஜநாகங்கள் பிடிபட்டதால் அந்த விவசாயி குடும்பம் கடும் அச்சத்தில் உள்ளது.

 

பாம்பாட்டிகள் மூலம் இந்த கொடிய விஷமுள்ள பாம்புகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன.மேலும் பல பாம்புகள் அந்த வீட்டில் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினார்கள்இதனால், அவ்வீட்டில் வசிக்கும் 8 பேர் கொண்ட குடும்பம் அச்சத்தில் உள்ளது.

 

மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தக் குடும்பம் ’ஆவாஸ் யோஜ்னா’ திட்டத்தின் மூலம் வீட்டினை பெற பலமுறை முயற்சித்தும் முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.பாம்புகளை பிடிக்க வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் வராதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது, அந்த பகுதியில்  விஷப் பாம்புகளை பிடிக்க எந்த குழுவும் இல்லாததால், பாம்பு பிடிப்பவர்களை அழைக்கும் நிலை ஏற்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

Tags : #UTTARPRADESH #14 POISONOUS SNAKES