''சென்னையில் கின்னஸ் சாதனை படைத்த உணவகம்''... 50 சமையல் கலைஞர்கள் சேர்ந்து சாதனை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 12, 2019 11:41 AM

கின்னஸ் சாதனை முயற்சிக்காக சென்னையில் 100 அடி தோசை உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.ஐஐடி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,சரவணபவனை சேர்ந்த 50 சமையல் கலைஞர்கள் சேர்ந்து 100 அடி நீளத்திற்கு தோசையினை சுட்டு  கின்னஸ் சாதனையினை படைத்திருக்கிறார்கள்.

100-feet dosa at IIT Madras eyes Guinness records

இப்பொது தான் உலகிலேயே முதல் முறையாக,50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி நீளத்தில் மிகப் பிரமாண்டமான தோசையை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தயாரித்தனர்.செஃப் வினோத் தலைமையில் சரவணபவன் சமையல் கலைஞர்கள் இணைந்து நேற்று மாலை 3 மணிக்கு இந்த சாதனையை படைத்தனர்.இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதற்காக 7 டன் எடை கொண்ட தோசை கல்லில், 27 கிலோ எடை கொண்ட பிரமாண்ட தோசை 100 அடி நீளத்திற்கு தயாரிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.இதற்குமுன் அகமதாபாத்தில் உள்ள ஸங்கல்ப் ஹோட்டல் தயாரித்த 54 அடி நீள தோசையே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த 100 அடி நீள தோசை தயாரிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தலைமை சமையல் கலைஞர் வினோத் 'இதற்காகவே 105 அடி நீளம் கொண்ட தோசை கல் தயாரிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 10 கிலோ மாவு இதில் பயன்படுத்தப்பட்டது.சரவணபவனை சேர்ந்த 50 சமையல் கலைஞர்கள்,105 அடி தோசைக்கல்லில் இதனை தயாரித்தார்கள்.மேலும் சுமார் 180 முதல் 200 டிகிரி வரை வெப்பத்தில் தோசைக்கல் சுடவைக்கப்பட்டு தோசை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags : #GUINNESS RECORDS #IIT MADRAS #100-FEET