'ஸ்கூல்ல தான் ஓப்பனிங் இறங்கி இருக்கேன்'... சீட்டுக்கட்டாய் விக்கெட்டை...தெறிக்க விட்ட வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 02, 2019 04:19 PM
இதற்கு முன்பு பள்ளிக்காக ஆடும் போதுதான் தொடக்க வீரராகக் களமிறங்கினேன் டெல்லி வீரர்களை தெறிக்க விட்ட சாம் கரன் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.அஸ்வின் வீசிய முதல் பந்திலே கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையை காட்டினார் பிரித்வி ஷா.பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும், தவானும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7 ஓவரில் ஸ்ரேயாஸ் நடையைக் கட்டினார்.
இந்நிலையில் கெய்லுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சாம் கரன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை அதிர வைத்தார்.சாம் கரன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைச் வீழ்த்தி,டெல்லி 152 ரன்களில் நடையை கட்ட காரணமாக அமைந்தார்.இதனிடையே போட்டிக்கு பின்பு பேசிய அவர் ''இதற்கு முன்பாக பள்ளிக்கு ஆடும் போதுதான் தொடக்க வீரராகக் களமிறங்கினேன் என்று கலகலப்பாக பேசினார்.