நாடு முழுவதும் உள்ள திருமணமாகாத இளம்பெண்களிடம் (20-24 வயது) தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஆய்வொன்றை நடத்தியதாக, 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பல ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை காண்டம் பயன்பாட்டில் பஞ்சாப் மாநில பெண்கள் தான் முதலிடம் பிடித்துள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 76% பஞ்சாப் பெண்கள் திருமணத்துக்கு முன் காண்டம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
2005 - 2006-ம் ஆண்டில் 2% இருந்த காண்டம் பயன்பாடு 2015 - 2016-ம் ஆண்டில் 12% என்றளவில் உயர்ந்துள்ளது.
அதே நேரம் மேகாலயா, மணிப்பூர், பீகார் மாநிலங்களில் திருமணத்துக்கு முன் காண்டம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 24% என்றளவில் உள்ளது.