‘பாஜக சார்பாக போட்டியிடும் ஜடேஜாவின் மனைவி’.. எந்த தொகுதி தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Mar 19, 2019 02:28 PM
இந்திய கிரிக்கெட் விரர் ஜடேஜாவின் மனைவியான ரிவபா, வரும் மக்களவைத் தேர்ததில் பாஜக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளாரான ரவீந்திர ஜடேஜாவுக்கும், ரிவபா என்பவருக்கும் கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. ரிவபா, காா்னி சேனா என்ற அமைப்பின் மகளிரணி தலைவியாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரிவபா அவரது கணவர் ஜடேஜாவுடன் சமீபத்தில் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இதனை அடுத்து ரிவபா கடந்த சில நாள்களுக்கு முன்பு குஜராத் மாநில அமைச்சர் ஆர்.சி.ஃபால்டு முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர், பிரதமர் மோடிதான் தனக்கு உந்துசக்தி, அதனால் தான் பாஜவில் சேர்ந்தேன் என அவர் தெரிவித்தார். மேலும் பெண்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதுதான் தன்னுடைய இலக்கு எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தொகுதியில் பாஜகவின் பூனம் மாடம் கடந்த தேர்ததில் வெற்றி பெற்று எம்.பி யாக உள்ளார். மேலும் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹர்திக் படேல் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.