'என்ன வந்தாலும் பாத்துக்கலாம்'...நாங்க தயாரா இருக்கோம்...உச்சக்கட்ட அலெர்ட்டில் எல்லைப்பகுதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Feb 26, 2019 04:22 PM
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் விமானப் படை அத்துமீறுவதை தடுக்கும் வகையில்,எல்லையில் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்குமாறு வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம்களில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் விமானப் படை அத்துமீறுவதை தடுக்கும் வகையில் இந்திய விமானப் படை மற்றும் ராணுவம் எல்லையில் உஷார்படுத்தப்பட்டுள்ளது.வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.இதனிடையே பிரதமர் மோடி பாதுகாப்புக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்