விவாகரத்து பெற்றபின் தம்பதிகள் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விவாகரத்து வழக்கு ஒன்றின் தீர்ப்பினை சமீபத்தில் வழங்கியது. தீர்ப்பில் ''இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொறியாளர் தனது மனைவிக்கு ரூ.37 லட்சத்தை 2 மாதங்களில் வழங்க வேண்டும்.
விவாகரத்துக்குப்பின் தம்பதிகள் தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிரக்கூடாது" என தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இருவருக்கும் புகைப்படங்கள் ஒரு பிரச்சினையாக மாறக்கூடாது என்பதற்காக இந்தத் தீர்ப்பினை வழங்கியதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.