பிக்பாஸ் வீட்டின் இளவயது போட்டியாளரான இவர், தன்னைச்சுற்றி நடக்கும் பல விஷயங்களை 'ஜஸ்ட் லைக் தட்' என ஹேண்டில் செய்யக்கூடியவர். மஹத் பிரச்சினையில் இவர்மீது உமிழக்கூடிய வன்முறைகளை சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.
ஆனால் இது எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டது மஹத் என்பதும், அவர் தனது வயதுக்குரிய முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்பதையும் மறந்துவிட்டு வசைகளை உதிர்ப்பது சரியில்லை. வெளியில் 3 வருடக்காதலியை விட்டு வந்த மஹத், வெறும் 70 நாளுக்குள்ளாக மற்றொருவர் மீது காதல் வயப்பட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
டாஸ்க்குகளில் தொடர்ந்து ஆர்வமுடன் பங்கேற்று வரும் யாஷிகாவுக்கு இந்த சீசனில் டைட்டிலை வெல்லக்கூடிய எல்லா தகுதிகளும் இருக்கிறது. அது எப்படி? என்று பொங்குபவர்கள் கடந்த சீசனில் ஆரவ் டைட்டில் வென்ற வரலாற்றினை அறிந்து கொள்ளவும்.
